Sunday, June 17, 2012

Guava And Grapes



கொய்யாப்பழம் 







"இரவு தூங்குவதற்கு முன் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுங்க "

மருத்துவ குணங்கள் அதிக...ம் உள்ளது கொய்யாப்பழம் மட்டுமே

கொய்யாபழத்தில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா தற்சமயம் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா என இருவகை உள்ளது. குறைந்த விலையில் அதிகச் சத்துக்கள் பெற கொய்யாச் சாறு தினமும் அருந்தலாம். இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது.


வயிற்றுப்புண் ஆற
இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.

கொழுப்பைக் குறைக்க:
அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்டிரால் குறையும்.

இரத்தச்சோகை மாற
இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது. இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது.

மருத்துவக் குணங்கள்:
• உடல் சூடு, மூலவியாதி குறைந்து நலம் கிட்டும்.
• ஒரே நாளில் மலச்சிக்கல் நீங்கும் அருமையான கனிச்சாறு. நீரிழிவுப் பிணியாளர்களும் சாப்பிடக் கூடிய கனி. குடல் புண்ணைக் குணப்படுத்தும்.
• அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளியேப்பம் விலகும்.
• கண் கோளாறுகள் விலகி, தோல் மினுமினுப்பு தரும்.
• தொப்பையைக் குறைக்கும்.








Guava is better than orange because guava contains more Vitamin C than orange and guava is a lot cheaper than orange.
The skin of guava contains more than 5 times Vit. C than that of an orange.IT Contains Vitamin A and B,Calcium,Nicotinic Acid,Phosphorus,Potassium,Iron,Fiber. SO guava is Beneficial in Prolonged menstruation,High blood pressure,Obesity and in Scurvy..!! 








புத்துணர்வு அளிக்கும் திராட்சை


திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.

ரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து ரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.!

திராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது. திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும். தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்புச் சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், சீரான சக்தியும் தருவது திராட்சை.






No comments: